திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 26 ஆகஸ்ட் 2022 (18:08 IST)

நீங்கள்தான் கல்வியைவிட உயிர் முக்கியம் என திரும்பியுள்ளீர்கள்: சுப்ரீம் கோர்ட்

ukraine students2
நீங்கள்தான் கல்வியை விட உயிர் முக்கியம் என நினைத்து இந்தியா திரும்பி உள்ளீர்கள் என உக்ரைனில் இருந்து இந்தியா திரும்பிய மாணவர்களிடம் உச்சநீதிமன்ற நீதிபதி தெரிவித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
உக்ரைனில் அந்நாட்டு மக்கள் வாழத்தான் செய்கிறார்கள் என்றும் யாரும் நாட்டை விட்டு வெளியேறி விட வில்லை என்றும் நீங்கள் தான் கல்வியைவிட உயிர்தான் முக்கியம் என இந்தியா திரும்பி உள்ளீர்கள் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதி ஹேமந்த் அவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர் 
 
மருத்துவ படிப்பை பாதியில் விட்டுவிட்டு இந்தியா வந்துள்ள மாணவர்கள் இந்தியாவில் படிப்பை தொடர வழிவகை செய்ய வேண்டும் என வழக்கு தொடர்ந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணையில் நீதிபதி கூறிய இந்த கருத்தை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.