வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வெள்ளி, 21 ஜூலை 2023 (09:10 IST)

செந்தில் பாலாஜியை அடிக்கடி சந்தித்தாரா டிஐஜி? சர்ச்சைக்கு விளக்கம்..!

புழல் சிறையில் இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜியை அடிக்கடி சிறை துறை டிஐஜி சந்தித்ததாக கூறப்படும் நிலையில் அவர் இதற்கு விளக்கம் அளித்துள்ளார். 
 
அமலாக்கத்துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி கடந்த சில நாட்களாக சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். 
 
இந்த நிலையில் சிறையில் அமைச்சர் செந்தில் பாலாஜியை சிறைத்துறை டிஐஜி அடிக்கடி சந்தித்ததாக கூறப்படும் நிலையில் இது குறித்து சிறைத்துறை டிஐஜி விளக்கம் அளித்துள்ளார்
 
அமைச்சர் செந்தில் பாலாஜியை ஒருமுறை மட்டுமே சந்தித்ததாகவும் அடிக்கடி சந்திக்க வில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.
 
Edited by Siva