1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 19 ஜூலை 2023 (17:58 IST)

24 மணி நேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு -ஹெச். ராஜா

h.raja
தமிழக  பாஜக முன்னாள் நிர்வாகி எச்.ராஜா, இன்னும் 24 மணி நேரத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வீட்டிற்கு அமலாக்கத்துறை ரெய்டு போகலாம் என்று எச்சரித்துள்ளார்.

இன்று சிவகங்கை மாவட்டத்தில்  தமிழக  பாஜக முன்னாள் நிர்வாகி எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

‘’பிஜேபியின் 2 பெண் நிர்வாகிகளும்கூட  கைது செய்யப்பட்டு, பெயில் கொடுக்கப்படாமல் உள்ளது, தமிழகத்தில் அறிவிக்கப்படாத எமர்ஜென்சி உள்ளது மாதிரி உள்ளது. பாஜக இதைக் கண்டு எல்லாம் மிரண்டு போகாது. நாங்கள் எந்தெந்த லிஸ்ட் கரெக்டா போட்டு வைத்துள்ளோமோ பாஜக அவுங்கள தூக்கிவிடும்.

இன்றைக்கு வந்த தகவல் உண்மையாக இருக்குமானால், இன்னும் 24 மணி நேரத்தில் அமைச்சர் உதயநிதி வீட்டைக் கூட அமலாக்கத்துறை தட்டலாம். இந்த ரெண்டு சிகாமணிகளும் (தெய்வீக சிகாமணி, கெளதம சிகாமணி)  உதயநிதிக்கு பினாமிகளாக உள்ளதாக சில பேர் உறுதிப்படுத்தாத தகவல் கூறி வருகின்றனர். உங்களை ஒட்டுமொத்தமாக காரித் துப்புதுவாங்க….  இத்தனை கேவலமாக அரசாங்கத்தை வைத்து, பிஜேபி பணியாட்களை தொட வேண்டாம்'' என்று தெரிவித்துள்ளார்.