வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Modified: சனி, 15 ஆகஸ்ட் 2020 (17:19 IST)

இந்தியாவில் சிறந்த முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி? அரசியல் போஸ்டரால் பரபரப்பு

ஆந்திராவில் கடந்த வருடம் நடைபெற்ற சட்டமன்றம், மாநிலங்களவைத் தேர்தலில் ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் கட்சி பெரும் வெற்றிபெற்றது. தற்போது ஜெகன்மோகன் ரெட்டி அங்கு முதலமைச்சராக உள்ளார். அவருக்கு கோயில் கட்டுமளவு அவரது செல்வாக்கு அதிகரித்துள்ளது.

இந்நிலையில் அவரது தாக்கம் மதுரையிலும் எதிரொலித்துள்ளது. மதுரையில் ஒரு போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது அதில், ஆந்திராவின் கர்ணனே, தமிழகத்தில் மாற்றமே, இந்தியாவின் சிறந்த முதல்வர் ஒய்.எஸ்.ஆர்.ஜெகன்மோகன் எட்டி என்று எழுதப்பட்டுள்ளது. இதன் கீழ் ஒய்.எஸ்.ஆர்.ஃபாலோயர் என எழுதியுள்ளனர்.

ஏற்கனவே தமிழகத்தில் உள்ள அரசியல் பரபரபுக்கு இடையே இதுவும் ஒன்றாகியுள்ளது.