வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: சனி, 23 நவம்பர் 2019 (17:29 IST)

பெரிய பூட்டா போடுங்கடா... ஜெகனின் அடுத்த அதிரடி!

ஆந்திராவில் இயங்கி வரும் மதுகடைகளின் உரிமையை ரத்து செய்யும்படி ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளார். 

 
ஆட்சிக்கு வரும் முன் ஆந்திராவில் உள்ள மதுக்கடைகளை முற்றிலுமாக அகற்றுவதாக ஜெகன் மோகன் ரெட்டி தெரிவித்திருந்தார். இதனை தற்போது செய்து முடிக்க ஆந்திராவில் செயல்படும் மதுக்கடைகளின் உரிமங்களை ரத்து செய்யும்படி உத்தரவிட்டுள்ளார். 
 
தற்போது ஆந்திராவில் செயல்படும் பார்களின் உரிமங்கள் வரும் டிசம்பர் 31 ஆம் தேதியோடு ரத்து செய்யப்படுகிறது. புதிய உரிமங்கள் அடுத்த ஆண்டு வழங்கப்படும். மேலும் புதிதாக உரிமம் வழங்கும் போது பாதி மதுக்கடைகள் மட்டுமே செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.