ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (18:16 IST)

ஹோட்டல், ஆடம்பர பங்களா கார்கள்: ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல்

ஜாபர் சாதிக்கிற்கு சொந்தமான ஹோட்டல், ஆடம்பர பங்களா மற்றும் ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற 7 உயர் ரக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
ரூ.2,000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் உள்ள ஜாபர் சாதிக்கின் ரூ.55 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 
 
ஜாபர் சாதிக் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு சொந்தமான 55 கோடி மதிப்புள்ளான சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்துள்ளது. இதில் ஹோட்டல், ஆடம்பர பங்களா, ஜாகுவார், மெர்சிடிஸ் போன்ற ஏழு உயர்ரக கார்கள் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
 
 ரூபாய் 2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில் சிறையில் ஜாபர் சாதிக் உள்ள நிலையில் அவருக்கும் அவரது கூட்டாளிகளுக்கும் சொந்தமான 55 கோடி ரூபாய் மதிப்புள்ளான சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டது இந்த வழக்கில் பெரும் திருப்புமுனையை ஏற்படுத்தி உள்ளது.
 
சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ள நிலையில் அடுத்த கட்டமாக வேறு என்ன நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
 
Edited by Siva