வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2024 (15:10 IST)

மகளுக்கு 10 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்த தந்தை: நீதிபதி கொடுத்த கடும் தண்டனை..!

பெற்ற மகளுக்கு 10 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்த தந்தைக்கு கடும் தண்டனை நீதிபதி அளித்துள்ளது கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கேரளாவில் பத்தாம் வகுப்பு படிக்கும் சிறுமி சந்தேகத்துக்கு இடமாக இருந்ததை அடுத்து பள்ளி ஆசிரியர் அவரை தனியாக அழைத்து பேசினார். அப்போது தனது தந்தை தனக்கு கடந்த சில ஆண்டுகளாக பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறியவுடன் ஆசிரியர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பாதிக்கப்பட்ட மாணவி ஒரு வயதாக இருக்கும் போதே அவரது தாய் இறந்து விட்டதாகவும் அதன் பிறகு வேறொரு பெண்ணை திருமணம் செய்த அவரது தந்தை தனது மகளுக்கு ஐந்து வயது முதல் அதாவது ஒன்றாம் வகுப்பு படிக்கும் போதிலிருந்தே பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் தெரிகிறது.

10 ஆண்டுகள் பாலியல் தொல்லை கொடுத்த தந்தை குறித்த வழக்கு திருவனந்தபுரம் நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் இந்த வழக்கில் தற்போது தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பில் சிறுமியின் தந்தை சாகும் வரை கடுங்காவல் சிறையில் இருக்க வேண்டும் என்றும் 1.60 லட்ச ரூபாய் அபராதம் செலுத்த வேண்டும் என்றும் தீர்ப்பளித்துள்ளார். இந்த தீர்ப்பு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Edited by Siva