திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 14 ஜூலை 2018 (15:44 IST)

சசிகலா கட்டுப்பாட்டில் அதிமுக? குட்டையை குழப்பும் தீபா!

அதிமுகவில் இணைந்து கட்சியை வழிநடத்த தனக்கு விருப்பம் என்றும் ஆனால் அதற்கு ஈபிஎஸ் ஓபிஎஸ் தடையாக இருப்பதாகவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா பேட்டி ஒன்றில் தெரிவித்தார். 
 
மேலும், அதிமுகவில் இணைய தன்னை ஓபிஎஸ் அழைத்தார். ஆனால் அதன்பின்னர் அவர் ஏன் பின்வாங்கினார் என்பது எனக்கு இப்போது வரை தெரியவில்லை. இந்த விஷயத்தில் ஓபிஎஸ் என்னை ஏமாற்றிவிட்டார் என்றே நினைக்கின்றேன் என்றும் கூறினார்.
 
இவ்வாறு பேசிய தீபா அதிமுக சசிகலாவின் கட்டுப்பாட்டில் இருப்பதாக கூறியுள்ளார். இது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவில் இணையும் விருப்பத்துடன் வலம் வரும் அவர் சசிகலா குடும்பத்தை இழுப்பது ஏன் என்று தெரியவில்லை. 
 
ஒரு வேளை உண்மையிலேயே சசிகலா தரப்பு அதிமுகவில் ஆதிக்கம் செலுத்துகிறதா அல்லது தினகரன், திவாகரன், சசிகலா மோதலை மேலும் அதிகரிக்க இப்படி குட்டையை குழப்புகிறாரா தீபா என்பது தெரியாமல் உள்ளது. 
 
ஆனால், பலரும் கண்டுக்கொள்வதாக இல்லை ஏனெனில் அவர் திடீர் திடீரென புகார்கள், சர்ச்சைகளைக் கிளப்பி விட்டு விட்டு மீண்டும் ஓய்வுக்குப் போய் விடுவார் என பரவலான கருத்துக்கள் உள்ளது.