செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (13:37 IST)

அடக்கம் செய்யப்பட்டது ஜெ.அன்பழகன் உடல்!

திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் உடல் கண்ணம்மாபேட்டையில் அடக்கம் செய்யப்பட்டது. 
 
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62.
 
திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு ஜூன் 10 ஆம் தேதியான இன்றுதான் பிறந்த நாள் என்பதும், பிறந்த நாளிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. கொரோனாவால் அவர் உயிரிழந்தது மேலும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
 
இந்நிலையில், சென்னை தி.நகரில் உள்ள வீட்டிற்கு ஜெ.அன்பழகன் உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு மகாலட்சுமி தெருவில் உள்ள வீட்டில் ஜெ.அன்பழகன் உடலுக்கு உறவினர்கள், தெரு மக்கள் அஞ்சலி செலுத்தினர். 
 
இதன பின்னர்  கண்ணம்மாபேட்டை மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட அவரது உடல், அங்கு அடக்கம் செய்யப்பட்டது. இதே சமயம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஜெ.அன்பழகன் உருவப்படத்துக்கு மு.க.ஸ்டாலின் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.