1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 10 ஜூன் 2020 (12:57 IST)

சட்டமன்ற பலத்தை இழக்கும் திமுக!

ஜெ. அன்பழகன் மரணமடைந்ததன் மூலம் சட்டமன்ற தொகுதிகளின் காலி இடங்கள் 3 ஆக அதிகரித்துள்ளது.

 
சென்னை சேப்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ ஜெ.அன்பழகன்  உடல்நலக்குறைவு காரணமாக சென்னை குரோம்பேட்டை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 62. 
 
திமுக எம்.எல்.ஏ அன்பழகனுக்கு ஜூன் 10 ஆம் தேதியான இன்றுதான் பிறந்த நாள் என்பதும், பிறந்த நாளிலேயே அவர் மரணம் அடைந்திருப்பது திமுகவினர்களை பெரும் சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. இவரது இறப்பு திமுகவின் பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. 
 
இவரின் எதிர்பாரா இறப்பை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தொகுதிகளின் காலியிடம் 3 ஆக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு துவக்கத்தில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் காத்தவராயன் (குடியாத்தம்) , கே.பி.பி.சாமி (திருவொற்றியூர்) மரணமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.