திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 29 ஜனவரி 2019 (11:04 IST)

சரவணா ஸ்டோர்சில் வருமானவரித்துறை சோதனை: கடைக்கு லீவ்; திநகரில் பரபரப்பு

சென்னை மற்றும் கோவையில் 74 இடங்களில் வருமான வரித்துறை அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
 
சென்னை தி.நகர் என்றாலே அனைவருக்கும் முதலில் ஞாபகம் வருவது சரவணா ஸ்டோர்ஸ் கடைதான். சரவணா ஸ்டோர்ஸ்க்கு தினமும் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்து செல்கின்றனர்.
 
இந்த நிலையில் காலை 7 மணி முதல் சென்னை தி.நகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ்(பிரம்மாடமாய்) கடைகளில் வருமான வரித் துறை  அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. சரவணா ஸ்டோர்ஸ் கடையில் மட்டுமின்றி பாடியில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ், பெரம்பூரில் உள்ள ரேவதி ஸ்டோர், ஜி ஸ்கொயர் மேலும் சென்னையில் 72 இடங்களிலும் கோவையில் இரண்டு இடங்களிலும் திடீர் ஐடி ரெய்டு நடைபெற்று வருகிறது.