பால் தினகரன் இடங்களில் 3வது நாளாக தொடரும் ரெய்ட் !!

Sugapriya Prakash| Last Modified வெள்ளி, 22 ஜனவரி 2021 (08:48 IST)
பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 3 ஆவது நாளாக இன்றும் ஐடி ரெய்டு தொடர்ந்து வருகிறது. 

 
இயேசு அழைக்கிறார் என்ற பெயரில் கிறிஸ்துவ மதப் பிரச்சாரக் கூட்டங்களை நடத்தி வரும் பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் வருமானத் துறை அதிகாரிகள் கடந்த இரண்டு நாட்களாக காலை முதல் சோதனை செய்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இயேசு அழைக்கிறார் என்ற குழுமத்திற்கு வந்த நிதிக்கு முறையாக வரி செலுத்தவில்லை என புகார் வந்ததாகவும் இந்த புகாரின் அடிப்படையில் வருமானத் துறை அதிகாரிகள் தமிழகம் முழுவதும் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் சோதனை செய்து வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
 
அதன்படி சென்னை பாரிமுனை, அடையாறு, கோவை காருண்யா பல்கலைக்கழகம் உள்பட பால் தினகரனுக்கு சொந்தமான 28 இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக சோதனை நடந்து வரும் நிலையில் இன்று மூன்றாவது நாளாக இந்த சோதனை தொடர்கிறது. 


இதில் மேலும் படிக்கவும் :