புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 5 ஜனவரி 2021 (07:40 IST)

சென்னையின் பல இடங்களில் பரவலாக மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி!

வடகிழக்கு பருவமழை ஏற்கனவே தீவிரமடைந்த நிலையில் இடையில் சில நாட்கள் மழை பெய்யாமல் இருந்தது. இந்த நிலையில் தற்போது சென்னை உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மீண்டும் மழை பெய்ய தொடங்கி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
குறிப்பாக சென்னையில் இன்று அதிகாலை முதல் பல இடங்களில் நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை கோயம்பேடு, வடபழனி, கிண்டி, மேற்கு மாம்பலம், அசோக் நகர், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலை முதலே பரவலான மழை பெய்து வருகிறது 
 
மேலும் தேனாம்பேட்டை, சைதாப்பேட்டை, அண்ணா சாலை, உள்ளிட்ட பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது. இதனால் சென்னையில் உள்ள பெரும்பாலான சாலைகளில் மழை நீர் தேங்கி இருப்பதால் இரண்டு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகன ஓட்டிகள் கவனத்துடன் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது 
 
மேலும் சென்னையில் ஒரு சில நாட்கள் இடைவெளிக்கு பின் மீண்டும் மழை பெய்து உள்ளதை அடுத்து சென்னை மக்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். இருப்பினும் வெளியில் செல்லும்போது கவனமாக செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது