ரெய்டு குறித்து எந்த செய்தியும் வரக்கூடாது: ஜெயா டிவிக்கு அதிகாரிகள் மிரட்டல்
இன்று காலை ஆறு மணி முதல் சென்னையில் உள்ள ஜெயாடிவி அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்து வருகின்றனர். இன்று காலை பணிபுரிய வந்த ஜெயா டிவி அலுவலர்கள் அலுவலகத்திற்குள் அனுமதிக்கப்படவில்லை. அதேபோல் இரவுப்பணி முடிந்த அலுவலர்களும் வெளியே செல்ல அனுமதிக்கப்படவில்லை என்று செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது.
இந்த நிலையில் ஜெயா டிவி மற்றும் ஜெயா ப்ளஸ் சேனல்களில் ஐடி ரெய்டு குறித்த எந்த செய்திகளும் வெளிவரக்கூடாது என்றும் மீறி செய்தி வெளியானால் ஜெயா டிவி அலுவலகத்தில் உள்ள உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் என்றும் வருமான வரித்துறையினர் மிரட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
ஆனாலும் ஜெயா ப்ளஸ் சேனலில் வருமான வரித்துறை சோதனை குறித்த செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.