வெள்ளி, 22 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 15 நவம்பர் 2017 (13:58 IST)

ரூ.500 கோடி சொத்துகள் பெயர் மாற்றம்? - கிருஷ்ணபிரியாவிடம் கிடுக்குப்பிடி விசாரணை

சசிகலா பரோலில் வெளிவந்த போது, பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகள் பெயர் மாற்றம் செய்யப்பட்டது தொடர்பாக, இளவரசியின் மகளும், விவேக்கின் சகோதரியுமான கிருஷணப்பிரியாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


 

 
சசிகலா குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் வீடுகளில், ஆபரேஷன் கிளீன் மணி என்ற பெயரில், வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் சசிகலா குடும்பத்தினர் பினாமிகள் பெயரில் வாங்கிய சொத்துக்கள், முறைகேடான பணப்பரிவர்த்தனை தொடர்பான ஆவணங்களும் சிக்கியது. மொத்தமாக ரூ.1500 கோடி கணக்கில் வராத சொத்து ஆவணங்கள், கிலோக்கணக்கில் தங்க, வைரை நகைகள் சிக்கியதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
 
இதில், இளவரசியின் மகன் விவேக்  மற்றும் மகள் கிருஷ்ணபிரியா ஆகியோரின் வீட்டில் மட்டும் அதிகாரிகள் 5 நாட்கள் சோதனை நடத்தினர்.  சசிகலா பரோலில் வந்த போது கிருஷ்ணபிரியாவின் வீட்டில்தான் தங்கினார். அப்போது ரூ.500 கோடி மதிப்புள்ள சொத்துகள் சிலரின் பெயருக்கு மாற்றம் செய்யப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதில், கிருஷ்ணபிரியாவிற்கு முக்கிய தொடர்பு இருப்பதாக அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.
 
இந்நிலையில், கிருஷ்ணப்பிரியாவும், அவரது சகோதரி ஷகிலாவும் இன்று வருமான வரித்துறை அலுவலகத்திற்கு நேரில் வந்து விசாரணையில் கலந்து கொண்டனர். ஷகிலா மிடாஸ் மதுபான ஆலையை நிர்வகிப்பதில் முக்கிய பொறுப்பில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.