திங்கள், 7 ஏப்ரல் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 2 ஜூன் 2023 (10:28 IST)

இசைஞானி இளையராஜா பிறந்தநாள்: நேரில் வாழ்த்து தெரிவித்த முதல்வர் ஸ்டாலின்..!

ilaiyaraja
இசைஞானி இளையராஜா இன்று தனது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் அவருக்கு திரையுலக பிரமுகர்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த நிலையில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இசைஞானி இளையராஜாவின் கோடம்பாக்கம் ஸ்டூடியோவுக்கு சென்று நேரில் வாழ்த்து கூறினார். 
 
இசைஞானி இளையராஜா பாஜகவின் எம் பி ஆக இருந்தாலும் அவருக்கு தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து கூறியது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. 
 
தன்னுடைய ஸ்டுடியோவுக்கு வந்த முதல்வரை இசைஞானி இளையராஜா வாசலில் நின்று வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இசைஞானி இளையராஜாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூற சென்ற முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர்கள் கேஎன் நேரு, பொன்முடி உள்ளிட்டோர் சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
Edited by Mahendran