ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: புதன், 31 மே 2023 (10:30 IST)

முக ஸ்டாலின், கமல்ஹாசனை சந்திக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: என்ன காரணம்..?

kejriwal
தமிழக முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஆகியோர்களை டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை சந்திக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த சந்திப்பு எதற்காக என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
 
டெல்லி அவசர சட்ட விவகாரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நாளை சந்தித்து டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் ஆதரவு திரட்டுகிறார் என தகவல் வெளியாகியுள்ளது.
 
மேலும் வரும் 2024 பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு மற்றும் நாடாளுமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்துவார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
 
முதலமைச்சர் முக ஸ்டாலினை நாளை அரவிந்த் கெஜ்ரிவால் சந்திக்கும் நிலையில், மநீம தலைவர் கமல்ஹாசனையும் சந்திப்பார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
 
Edited by Mahendran