நடிகை வரலட்சுமி பாஜகவில் இணைகிறாரா?
பிரபல நடிகை வரலட்சுமி சரத்குமார், பாஜகவில் இணையவுள்ளதாக ஒரு வதந்தி கடந்த சில நிமிடங்களாக வேகமாக பரவி வரும் நிலையில் இந்த வதந்திக்கு அவர் முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயலாளர் முரளிதர் ராவ், பாஜக ஆட்சியின் சாதனைகள் குறித்து பல முக்கிய பிரமுகர்களை சந்தித்து தெரிவித்து வருகிறார். அந்த வகையில் இன்று நடிகை வரலட்சுமியை சந்தித்த அவர் பாஜகவின் ஆட்சி சாதனை குறித்த புத்தகம் ஒன்றை வழங்கினார்.
இந்த சந்திப்பால் வரலட்சுமி, பாஜகவில் இணையவுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. ஆனால் தான் பாஜக உள்பட எந்த கட்சியிலும் இணையும் திட்டம் இல்லை என்றும் பிரதமர் மோடியின் தலைமையிலான இந்த நான்கு ஆண்டு ஆட்சியில் பெண்களின் பாதுகாப்புக்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதற்கு முரளிதரராவ் அவர்களிடம் நன்றி கூறியதாகவும் வரலட்சுமி கூறியுள்ளார்