1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 19 மார்ச் 2021 (15:25 IST)

உங்களின் பைனான்சியர் இவர்தானா??? கமலுக்கு அல்போன்ஸ் கேள்வி

சமீபத்தில் எதிர்க்கட்சிகளின் பிரபலங்களின் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை செய்ததாக தகவல்கள் வந்தன. குறிப்பாக திமுக மதிமுக மற்றும் மக்கள் நீதி மய்யம் கட்சி பிரமுகர்களின் வீடுகளில் வருமான வரி சோதனை செய்யப்பட்டது
 
இவற்றில் வருமான வரி சோதனைக்கு உள்ளானவர்களில் ஒருவர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொருளாளர் சந்திரசேகர் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு சொந்தமான பல இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் ரூபாய் 80 கோடி அளவிற்கு அவருடைய வருமானம் மறைக்கப்பட்டுள்ளதும், அந்த வருமானத்திற்கு அவர் வரி கட்டாமல் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக வருமான வரித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
 
அதிமுக திமுக போன்றவை ஊழல் கட்சிகள் என்றும் தங்களது கட்சி ஊழலில் இருந்து வேறுபட்டு மாற்றத்தை கொண்டு வரும் கட்சி என்றும் கமலஹாசன் கூறிவரும் நிலையில் அவருடைய கட்சியைச் சேர்ந்த பொருளாளர் ரூபாய் 80 கோடி அளவுக்கு வருமானத்தை மறைத்து வரி ஏய்ப்பு செய்து உள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
இதுகுறித்து நடிகர் கமல்ஹாசன் கூறியதாவது: 
சட்டம் தன் கடமைகளைச் செய்யும்.அது தனிநபர் மேல வரும் ரெய்டு என்பதால் கட்சியையோ என்னையோ பாதிக்காதுஎன்று தெரிவித்தார்.
இந்நிலையில், கமல்ஹாசனுக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில்,  எனது ராஜ்யம் மிஷன் ராஜ்யம். கமிஷன் ராஜ்யமல்ல அல்ல என்று கமல்ஹாசன் கூறினார். உங்களது கட்சியின் பொருளாளர் திருப்பூர் சந்திரசேகரன் அதிமுக கமிஷன் ராஜ்யத்தின் மையப்புள்ளிகளில் முக்கியமானவர் . அவர்தான் உங்கள் பைனான்சியர் என்பது உண்மைதானா??? நேர்மைதான் எனது தகுதி என்ற நீங்கள்  அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டுமல்லா எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.