திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வியாழன், 8 செப்டம்பர் 2022 (14:20 IST)

ஒரு பொறுப்புள்ள அமைச்சர் செய்யக்கூடிய காரியம்மா ? பாஜக நிர்வாகி டுவீட்

tiruchy surya shiva
அரசுப் பேருந்தில் ஒரு பெண் அவமானப்படுத்தப்பட்டுள்ளதாக கூறி பாஜக பிரமுகர்  திருச்சி சூர்ய சிவா தமிழகப் போக்குவரத்துதுறை அமைச்சருக்கு டிவீட் பதிவிட்டுள்ளார்.

 தமிழகத்தில் கடந்த ஆண்டு முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு ஆட்சிப் பொறுப்பு ஏற்றது. அதன்பின், பல்வேறு அறிவிப்புகள், திட்டங்களையும் மக்களுக்கு செய்து வருகிறது.

இந்த நிலையில், பாஜக பிரமுகர் தன் டுவிட்டர் பக்கத்தில் அரசுப்பேருந்தில், மகளிர்க்கு இலவசம்ன்னு சொல்லி நீங்க பெருமைப்பட்டுக்குறீங்க ஆனால் பயணம் பண்ற மகளிர்கள் இங்கே அவமானப்பட்டு கொண்டிருக்கிறார்கள் இதுதான் திராவிட மாடலா என்று அமைச்சர் சிவங்சங்கருக்கு டேக் செய்திருந்தார்.

இதையடுத்து போக்குவரத்து  அமைச்சர்  சிவசங்கர் அந்த டேக்கை ரிமூவ் செய்துவிட்டார். இந்த நிலையில்,  பாஜக  பிரமுகர் அவருக்கு மீண்டும் தன் டுவிட்டர் பக்கத்தில் ஒரு பதிவிட்டுள்ளார்.

அதில், தங்களுடைய @sivasankar1ss இலாகாவில் தவறு நடந்துள்ளது . ஒரு சாமானிய பெண்மணி கைக்குழந்தையுடன் அவமானப்படுத்தப்பட்டுள்ளார் என்பதை தெரிவிக்க தங்களை Tag செய்தால் சம்பந்தப்பட்ட நடத்துனரை ரிமூவ் செய்யாமல் நான் Tag செய்ததை ரிமூவ் செய்வது ஒரு பொறுப்புள்ள அமைச்சர் செய்யக்கூடிய காரியம்மா ? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.