1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (17:52 IST)

இந்து முஸ்லிம் பிரச்னை, பா.ஜ.க வின் ஆட்சியில் இல்லாமல் இருக்கிறது- அண்ணாமலை

Annamalai
இந்து முஸ்லிம் பிரச்னை, பா.ஜ.க வின் ஆட்சியில் இல்லாமல் இருக்கிறது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

கடந்த  2014 ஆம் ஆண்டு பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு மத்தியில் ஆட்சிப் பொறுப்பு  ஏற்றது, அதன்பின், மத்தியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2019 ஆம் ஆண்டு  இரண்டாம் முறை ஆட்சிப் பொறுப்பு ஏற்றது. இந்த அரசின் திட்டங்கள், அறிவிப்புகள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை காங்கிரஸ் கட்சி மீது கடுமையான விமர்சனம் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியுள்ளதாவது :

காங்கிரஸ் கட்சி கடைசி 10ஆண்டுகள் ஆண்டபோது இந்தியாவுக்குள் நடந்த வெடிகுண்டு தாக்குதல்… நக்சல் தாக்குதல், இந்து முஸ்லிம் பிரச்னை, பா.ஜ.க வின் ஆட்சியில் இல்லாமல் இருக்கிறது. இதுதான் பிரதமர் திரு.@narendramodi அவர்களின் சாதனை பயணம் எனத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் எம்பி ராகுல், இன்று இந்திய ஒற்றுமை யாத்திரையை தமிழகத்தில் இருந்து தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது,