செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 25 ஜூலை 2017 (22:15 IST)

ரோபோ சங்கரை வறுத்தெடுத்த வைகோ தொண்டர்கள்: அதிர்ச்சி தகவல்

சின்னத்திரையில் இருந்து பெரிய திரைக்கு வந்த வந்த ரோபோசங்கர் தற்போது தான் நல்ல பட வாய்ப்புகளை பெற்று முன்னேறி வருகிறார். இந்த நிலையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவை அவர் கேலியாக தனது டுவிட்டரில் விமர்சனம் செய்ததாக வதந்தி பரவியது. இதற்கு பதிலடியாக ரோபோவை மதிமுக தொண்டர்கள் பதிலுக்கு வறுத்தெடுத்தனர்.



 
 
இதனால் கதிகலங்கி போன ரோபோசங்கர், அந்த டுவிட்டர் பக்கத்திற்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை, அது என் பெயரில் உள்ள ஃபேக் ஐடி என்று விளக்கம் கொடுத்துள்ளார்.
 
சற்றுமுன் அவரது டுவிட்டரில் அவர் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது:  என் பெயரில் ஒரு போலியான டுவிட்டர் ஐடி உருவாக்கி அதில் அய்யா வைகோ குறித்து நான் பேசியதாக சிலர் வதந்தி பரப்பி வருகின்றனர். அது என்னுடைய ஐடியே கிடையாது. இதுகுறித்து விளக்கம் கேட்டு எனக்கு ஏகப்பட்ட போன் கால்கள் வந்து கொண்டிருக்கின்றது. நான் அனைவருக்கும் பொறுமையக விளக்கம் அளித்து வருகிறேன். அந்த போலி ஐடி பக்கத்தில் இருந்து வெளிவரும் எந்த செய்திக்கும் நான் பொறுப்பு கிடையாது. இந்த விஷயம் மட்டுமின்றி இதுபோன்று நிறைய விஷயங்களில் என்னுடைய பெயருக்கு களங்கம் ஏற்படும்படி சிலர் செய்து வருகின்றனர். இதன் மூலம் அந்த செயல்களுக்கும் எனக்கும் சம்பந்தம் இல்லை என்பதை பதிவு செய்து கொள்கிறேன். காவல்துறை அதிகாரிகள் தயவுசெய்து இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்' என்று ரோபோ சங்கர் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.