செவ்வாய், 28 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : செவ்வாய், 24 டிசம்பர் 2019 (18:37 IST)

ஒரே ராசியில் கூடும் 6 கிரங்கள்: மனிதர்களுக்கு ஆபத்தா??

நாளை ஒரே ராசியல் 6 கிரங்கள் இணைவது மனிதர்களுக்கு ஆபத்தானதா என சென்னை பிர்லா கோளரங்க நிர்வாகம் பதில் அளித்துள்ளது. 
 
சூரியன், சந்திரன், குரு, சனி, புதன், கேது ஆகிய 6 கிரகங்கள் தனுசு ராசியில் இணைந்து ராகுவின் பார்வையை பெறுகிறது. இது 26 ஆம் தேதி துவங்கி 27 ஆம் தேதி வரை 3 நாட்கள் நடைபெறும் என ஜோதிட சாஸ்திர வல்லுநர்கள் கூறியுள்ளனர்.
 
இந்நிலையில் 6 கோள்கள் இணைவது ஆபத்தானதா என சென்னை பிர்லா கோளரங்க நிர்வாகம் பதில் அளித்துள்ளது. இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது, கோள்கள், சூரியனை தங்கள் சுற்றுப்பாதையில் சுற்றி வருகின்றன. 
 
சில நேரங்களில் ஒரு கோள் மற்றொரு கோளை முந்தி செல்வதை போலவும், அருகருகே அமைந்திருப்பது போலவும் தோன்றும். ஆனால், உண்மையில் அவற்றிற்கு இடையே பல கோடி கிலோ மீட்டர் தூரம் விலகி உள்ளன. 
 
இது பூமியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது. மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதற்கு அறிவியல் பூர்வமாக ஆதாரம் எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.