தமிழக விவசாயிகளுக்கு உதவும் ’புது செயலி’ அறிமுகம்

uthaykumar
Last Modified செவ்வாய், 5 மார்ச் 2019 (19:06 IST)
தமிழக  விவசாயிகளுக்கு மிகவும் பயனுள்ள வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இ - அடங்கல் செயலியை தமிழ்நாடு அமைச்சர் ஆர்.பி உதயகுமார் சென்னையில் அறிமுகம் செய்துள்ளார்.
விவசாயிகள் தங்கள் நிலத்தில் பயிர் செய்துள்ள பயிர்களுக்கு உரம், பூச்சி, மருந்து போன்றவற்றை அரசு மூலம் பெறுவம் வகையில் இந்த செயலி உள்ளது. நிலத்தில் பயிர் செய்யவேண்டி பயிர் கடன் பெறவழியுண்டு.
 
ஆனால் விவசாயிகள் தங்கள் நிலத்தின் அடங்கள் சான்று வைத்திருத்தல் அவசியமாகும். அதாவது அரசாங்கம் எதேனும் பயனுள்ள முடிவுகள் எடுப்பதற்கும் இந்த செயலிகள் உதவிகரமாக இருக்கும். மேலும் பேரிடர் காலத்தில் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கேற்பவும் இந்த செயலி விவசாயிகளுக்கு உபயோகமாக இருக்கும் என்று இதை அறிமுகம் செய்த அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசினார்.


இதில் மேலும் படிக்கவும் :