இதோ பாருங்க...வாட்ஸ்அப் பதிப்பில் பி.ஐ.பி. மோட் பயன்படுத்துவது எப்படி...?

whatsa app
Last Updated: செவ்வாய், 29 ஜனவரி 2019 (13:10 IST)
நம் அன்றாட வாழ்வின் ஒரு அங்கமாகவே வாட்ஸ் அப் செயலி மாறிவிட்டது. இப்பொழுது பண்டிகையோ, கொண்டாட்டமோ, இறந்தவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்துவதற்கும் கூட பெரும்பாலான மக்கள் இந்த வாட்ஸ் அப்பில் மூலமாகவே வாழ்த்துக்களையும், இரங்களையும் சொல்லி விட்டு அடுத்த வேலையைப் பார்க்க நேரமின்றி அவதியில் எந்திரமாக ஓடுகிறார்கள்.
இத்தகைய முக்கிய அங்கமாக உள்ள இந்த வாட்ஸப் செயலிலில் சமீபத்தில் வாய்ஸ் மூலமாக டைப் செய்யாமலேயே மெசேஜ் அனுப்பும் வசதி வந்தது.இந்நிலையில் வாட்ஸ் அப்பில் தற்போது பிஐடி மோட் வசதி வாட்ஸப் வெப்பதிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
whatsa app
அதாவது வாட்ஸ் அப் வெப் பதிப்பில் 0.3.2041 அப்டேட் வெளியாகியுள்ளது. இதில் இருந்த அப்டேட்டில் உள்ள குறைபாடுகள் பயனாளர்களின் வசதிக்கேற்ப நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் வாட்ஸ் அப் வெப்பதிப்பில் ஃபேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் போன்ற சேவைகளுக்கு பிஐபி (பிக்சர் இன் மோட்) வசதி திருப்தி கரமாக உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வசதியை சோதனை செய்ய வீடியோ லின்க் ஒன்றை நாம் அனுப்ப வேண்டும் அல்லது மற்றவர் நமக்கு அனுப்ப் வேண்டும். அப்படி நமக்கு வந்த வீடியோ லிங்க் உடன் பிரிவியூ வாட்ஸ்  அப் சாட் திரையில் தோன்றும் இதனை க்ளிக் செய்யும் போது வீடியோ சாட் ஸ்கிரீனினுள் இயங்கும்.
 
இதனையடுத்து பிஐபி திரையை மூடாமல் சாட் ஸ்கிரீனை மாற்றிக்கொள்ளும் வசதியும் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
whatsa app
எனினும் நமக்கு பிஐபி மோட் இயங்கவில்லை எனில் நாம் பழைய பதிப்பைதான் பயன்படுத்தி வருவதாக தெரிந்துகொள்ளலம்.
 
இதில் வாட்ஸ் அப் அப்டேட்டினை பயன்படுத்த உன்ங்களது பிரவுசரின் கேட்சிகளை டெலிட் செய்து விட்டு பிரவுசரை ரீஸ்டார்ட் செய்ய வேண்டும். இப்படி செய்த பின்னர் வாட்ஸ் அப் வெப் லேட்டஸ்ட் வெர்ஸ்சனாக அப்டேட் ஆகி இருக்கும். 


இதில் மேலும் படிக்கவும் :