1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வெள்ளி, 25 மே 2018 (16:10 IST)

2 மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கம் ரத்து: மக்கள் மகிழ்ச்சி

தூத்துகுடியில் நடைபெற்று வந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் கடந்த மூன்று நாட்களாக உச்சத்தில் இருந்த நிலையில் போராட்டக்காரர்களின் தொடர்பு இணைப்புகளை கட்டுப்படுத்த சமீபத்தில் இணையதள சேவை நிறுத்தப்பட்டது. தூத்துகுடி, நெல்லை மற்றும் குமரி ஆகிய மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை நிறுத்தப்பட்டதால் பல முக்கிய வேலைகள் முடங்கின. குறிப்பாக ஆன்லைனில் கல்லூரிகளில் விண்ணப்பிக்க்கும் மாணவர்களுக்கு கடும் சிக்கல் ஏற்பட்டது.
 
இந்த நிலையில் மூன்று மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கியதை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனுதாக்கல் செய்தார். இந்த மனுவின் விசாரணை சென்னை ஐகோர்ட்டில் தற்போது நடந்து வருகிறது.
 
இந்த நிலையில் இன்று காலை முதல் தூத்துகுடியில் இயல்பு வாழ்க்கை மெல்ல மெல்ல திரும்பியது. பலத்த போலீஸ் பாதுகாப்புடன் பேருந்துகள் இயக்கப்பட்டன. அத்தியாவசியமான கடைகள் திறக்கப்பட்டன. அம்மா உணவகத்தில் இலவசமாக உணவு வழங்கப்பட்டது.
 
இந்த நிலையில் சற்றுமுன் தமிழக அரசு  நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்களில் மட்டும் இணையதள சேவை முடக்கத்தை ரத்து செய்தது. அதேபோல் விரைவில் தூத்துகுடி மாவட்டத்திலும் இணையதள சேவை தொடங்கப்படும் என கூறப்படுகிறது இந்த நிலையில் தென் மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கத்திற்கு சென்னை ஐகோர்ட் தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது