வெள்ளி, 12 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. பிரபலமானவை
Written By
Last Updated : வெள்ளி, 25 மே 2018 (16:10 IST)

நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு

நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமாரி மாவட்டகளின் இணைய சேவையை முடக்கும்படி உளவுத்துறை உத்தரவு பிறப்பித்ததையடுத்து மூன்று மாவட்டங்களிலும் இணைய சேவை முடக்கப்பட்டது. 
நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கம் ரத்து - தமிழக அரசு
தூத்துக்குடி போராட்டம் தொடர்பாக இணையதளங்களில் வதந்திகளை பரப்பப்படுவதை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கபப்ட்டுள்ளது எனவும், இணைய சேவையை முடக்குவது மூலம் சமூக வலைத்தளங்களில் தொடர்பு கொள்ள முடியாது எனவே வன்முறையை கட்டுப்படுத்த முடியும் எனவும், போராட்டம் குறித்த தவறான செய்திகள் பரவாமல் தடுக்கப்படும் என்றும் உளவுத்துறை சார்ப்பில் தெரிவிக்கப்பட்டது. 
 
இந்நிலையில் தற்பொழுது தூத்துக்குடியில் இயல்பு நிலை திரும்பி வருவதால் நெல்லை, கன்னியாகுமாரி மாவட்டங்களில் இணைய சேவை முடக்கத்தை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.