1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: வெள்ளி, 4 மார்ச் 2022 (19:47 IST)

’மாறன்’ படத்தில் இருந்து விலகிய எனக்கு வாழ்த்துக்கள் வேண்டாம்: விவேக்

தனுஷ் நடித்த ’மாறன்’  திரைப்படத்திலிருந்து நான் ஆரம்பத்திலேயே விலகிவிட்டேன் என்றும் எனவே எனக்கு வாழ்த்துக்கள் வேண்டாம் என்றும் பாடலாசிரியர் விவேக் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
 தனுஷ் நடிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’மாறன். இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் வசனங்கள் மிகப்பெரிய அளவில் பிரபலமானது 
 
இந்த படத்தின் வசனம் எழுத முதலில் பாடலாசிரியர் விவேக் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் வாழ்த்துக்கள் குவிந்தது. ஆனால் தான் இந்த படத்திற்கு தான் வசனம் எழுதவில்லை என்றாலும் இந்த படத்தில் இருந்து விலகி விட்டேன் என்றும் எனவே இந்த படத்திற்கு வசனம் எழுதியவருக்கு அந்த வாழ்த்துக்கள் செல்லட்டும் என்றும் விவேக் தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
 
 மேலும் ஒரு சில கருத்துவேறுபாடுகளால் ’மாறன்’ படத்திலிருந்து விலகினாலும் எனக்கு ஆரம்பக்களமாக இருந்தது ’மாறன்’  தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்