திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Sinoj
Last Modified: வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (22:47 IST)

நாயின் மீது ஸ்டிக்கர் ஒட்டிய பாஜகவினர் !

மேற்கு வங்க மாநிலத்திலும் சட்டசபைத் தேர்தல் நடைபெற்று வருகிறது.  நாளை 4 ஆம் கட்டமாக 40க்கும் மேற்பட்ட தொகுதிகளுக்குத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான பிரச்சாரத்தில் அம்மாநில  பாஜக, திரிணாமுள், உள்ளிட்ட கட்சிகள் ஈடுபட்டுள்ளனர். விமர்சித்தார்.

மேற்கு வங்க மாநிலத்தில் 8 கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே மம்தா தலைமையிலான திரிணாமுள், பாஜக, காங்கிரஸ் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்நிலையில், இன்று கொல்கத்தாவில் பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவினர் ஈடுபட்டபோது, தெருவில் சுற்றித்திரிந்த நாயின் வாலிலும் உடலும் ஓட்டுக்கேட்டு ஸ்டிக்கர் ஓட்டினார்கள் சிலர். இதைப்பார்த்த விலங்கு நல ஆர்வலர்கள் நீக்குமாறு கூறியபோது அவர்களிடம் பாஜகவினர் வாக்குவாதம் செய்தனர்.