1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Updated : திங்கள், 5 செப்டம்பர் 2016 (15:38 IST)

’பெண்களை சதைப்பிண்டங்களாக காட்டுகின்றனர்’ - இயக்குநர் ரஞ்சித்

சினிமாவில் பெண்கள் சதைப்பிண்டங்களாக காட்டப்படுகின்றனர் என்று திரைப்பட இயக்குநர் பா. இரஞ்சித் கூறினார்.
 

 
பெண்கள் மீதான வன்முறைக்கு எதிராக அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் சனிக்கிழமையன்று சென்னையில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு இயக்குநர் பா.இரஞ்சித் பேசினார்.
 
அப்போது பேசிய அவர், ”சினிமாவில் பெண்கள் சதைப்பிண்டங்களாக காட்டப்படுகின்றனர். பாலியல் இச்சை பற்றி பேசுகிற பெண்கள் வில்லன்களோடு இருப்பவர்களாகவும், அவர்கள் சிறுபான்மை சமூகத்தினர் பெயர் கொண்டவர்களாக காட்டுகின்றனர். உயர் சமூகத்து பெண்கள் பேசினால் அது புரட்சியாகவும், மற்ற பெண்கள் பேசினால் குற்றமாக சினிமா காட்டுகிறது.
 
திரைப்படங்களில் சாதி மறுப்பு திருமணங்கள் செய்து கொள்பவர்கள் கொல்லப்படுவார்கள். படைப்பாளிகளுக்கு சமூக அக்கறையோடு இருக்க வேண்டும்.
 
பெண்கள் பருவமடைந்த பெண் குழந்தைகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் கற்பிக்கப்பட்டு, உளவியல் ரீதியாக பீதி உருவாக்கப்படுகிறது. இதனால் பெண்கள் சமூகத்தில் நிகழும் பிரச்சனைகளை தனியே எதிர்கொள்ள முடியாமல் ஆண் துணையை நாடுகிறார்கள். இதுவே மோசமானது. நமது குடும்ப அமைப்பு மிக மோசமானதாக உள்ளது” என்றார்.