வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: சனி, 5 ஆகஸ்ட் 2023 (12:05 IST)

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் கனிமொழி எம்பி ஆய்வு..!

மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று ஆதிச்சநல்லூரில் உலக தரத்தில் அமைக்கப்படும் அருங்காட்சியக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தபோது கனிமொழி எம்பி உடன் இருந்தார் 
 
மதிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில நாட்களாக தமிழகத்தில் வருகை தந்துள்ளார் என்பது தெரிந்ததே. இந்த நிலையில் இன்று அவர் ஆதிச்சநல்லூரில் உலக தரத்தில் அமைக்கப்பட்டு வரும் அருங்காட்சியக கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார்.
 
மேலும் அவர் அகழாய்வின்போது கிடைத்த பொருட்களையும் பார்வையிட்டார். மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களுடன் திமுக எம்பி கனிமொழி மற்றும் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் உடன் இருந்தனர் என்பதும் அவர்களும் ஆய்வு செய்தனர் என்றும் குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள் இணையதளத்தில் வைரல் ஆகி வருகின்றன.
 
Edited by Mahendran