5 அம்சக் கோரிக்கைள்.. அமைச்சர் தா.மோ.அன்பரசன்சிறு குறு தொழில் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை..!
5 அம்சக் கோரிக்கைளை நிறைவேற்றக் கோரி சிறு குறு தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் உடனான பேச்சுவார்த்தையில் வலியுறுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது.
சென்னை கிண்டியில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகளுடன் அமைச்சர்கள் தா.மோ.அன்பரசன் நேற்று ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் சில முக்கிய கோரிக்கைகள் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகளால் வைக்கப்பட்டது.
குறிப்பாக நிலைக் கட்டணம், பீக் அவர் கட்டணம் ரத்து செய்தல் உள்ளிட்ட 5 அம்சக் கோரிக்கைளை நிறைவேற்ற அமைச்சரிடம் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகள் வலியுறுத்தினர்
மேலும் அமைச்சர் தா.மோ.அன்பரசன் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழிற்சங்க பிரதிநிதிகளின் கோரிக்கைகளை ஆலோசிப்பதாக தெரிவித்துள்ளார்,.
Edited by Siva