வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 9 செப்டம்பர் 2019 (18:46 IST)

பிறந்த குழந்தையின் உடலில் இருந்த ஊசி... மீண்டும் அரசு மருத்துவமனையில் அலட்சியம் !

மேட்டுப்பாளையம் அரசு மருத்துவனையில் பணியாற்றும் செவிலியர்களின் அலட்சியத்தால், பிறந்த குழந்தையின் உடலில் ஊசி சிக்கியுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள எம்.எஸ்.ஆர் என்ற பகுதியைச் சேர்ந்தவர்  பிரபாகரன் (28). இவரது மனைவி மலர்விழி (20). கடந்த  ஆகஸ்ட் மாதத்தில், கர்ப்பமாக இருந்த மலர்விழிக்கு, வயிற்றில் வலி ஏற்பட்டது. அதனால், மேட்டுப்பாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் அவரை சேர்த்தனர். அங்கு அவருக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. 
 
இதனையடுத்து, குழந்தை பிறந்த அடுத்த நாள், குழந்தைக்கு தடுப்பூசி போடுவதாகக் கூறி, குழந்தையின் கை மற்றும் காலில் ஒரு ஊசி போட்டுள்ளனர். அதன்பின்னர் குழந்தை அழுதபடி இருந்தது. குழந்தை பசிக்கு பசிக்கு அழுவதாக நினைத்துக்கொண்டார் மலர்விழி.
அதன்பின்பு, மருத்துவமனையில் இருந்து மலர்விழி டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதால் குழந்தையுடம் வீட்டுக்குச் சென்றுள்ளார். வீட்டிலும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை என தெரிகிறது. மேலும், குழந்தைக்கு ஊசி போட்ட இடத்தில் வேகமாக வீங்கிக்கொண்டு வந்ததால், மலர்விழி அதிர்ச்சி அடைந்தார்.
 
குழந்தைக்கு குளிப்பாட்டி விட்டால் அழுகையை நிறுத்தும் என்று, குழந்தைக்கு தண்ணீர் ஊற்றி தேய்த்துள்ளனர். அப்போது, குழந்தையின் கையில் லேசாக ஊசி குத்தியுள்ளது.  அதன்பிறகு அவர்களுக்கு விஷயம் புரிந்தது. செவிலியர்கள் குழந்தைக்கு ஊசி மட்டும் போட்டு அதை எடுக்காமல் சென்றது தெரியவந்தது.
 
இதனையடுத்து மருத்துவமனைகு சென்று இதுகுறித்து  புகார் அளித்தார். பின்பு , குழந்தையின் உடலில் இருந்த ஊசி அப்புறப்படுத்தப்பட்டது.
 
பணியில் அலட்சியக் குறைவாக இருந்த செவிலியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் மலர்விழி , மருத்துவமனை டீனிடம் புகார் மனு அளித்துள்ளார்.

ஏற்கனவே சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஒரு பெண்ணுக்கு எய்ட்ஸ் நோயாளியின் ரத்தம் கொடுத்தது தொடர்பாக தமிழகத்தில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவமும் மக்களிடையே அரசு மருத்துவமனையின் மீதான நம்பகத்தன்மையை குறைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகிறது.