திங்கள், 8 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!

சென்னையில் இருந்து கிளம்பும் 100 இண்டிகோ விமானங்கள் ரத்து.. பல மடங்கு உயர்ந்த விமான கட்டணங்கள்..!
இண்டிகோ விமான நிறுவனத்தின் தொடர்ச்சியான பிரச்சினைகள் காரணமாக, நாடு முழுவதும் நூற்றுக்கணக்கான விமானங்கள் ரத்து செய்யப்படுவது பயணிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
விமான பயண கட்டணங்களும் பல மடங்கு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. உதாரணமாக, டெல்லியில் இருந்து சென்னை வர சாதாரணமாக ரூ.7,500 என்ற கட்டணத்தில் இருந்த நிலையில், தற்போது ரூ.88,000 வரை கட்டணம் என்று கூறப்படுவதால் பயணிகள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
 
இந்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் இன்று ஐந்தாவது நாளாக 100 இண்டிகோ விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இண்டிகோ ஏர்லைன்ஸ் விமான சேவை பாதிப்பு காரணமாக, சென்னை உள்பட நாடு முழுவதும் அதில் பயணம் செய்ய முன்பதிவு செய்த பயணிகள் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகிறார்கள்.
 
உடனடியாக மத்திய அரசு இதில் தலையிட்டு, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பயணிகள் மத்தியில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
 
Edited by Siva