ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Abimukatheesh
Last Updated : திங்கள், 4 செப்டம்பர் 2017 (14:02 IST)

தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் கனமழை; இந்திய வானிலை மையம் எச்சரிக்கை

அடுத்த மூன்று நாட்களில் இந்தியா உள்பட 12 மாநிலங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.


 

 
இந்தியாவில் அசாம், பீகார், குஜராத் மற்றும் மும்பை ஆகிய மாநிலங்களில் கனமழை பெய்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. அசாம் மற்றும் மும்பையில் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. மும்பையில் 12 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் மும்பை வாசிகள் இரண்டு நாட்களுக்கு வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் அடுத்த மூன்று நாட்களில் தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 2015ஆம் ஆண்டு நிகழ்வு போல மீண்டும் சென்னையில் வெள்ளம் வந்துவிடுமோ என்று மக்கள் அச்சத்தில் உள்ளனர். 
 
காற்றழுத்த தாழ்வுநிலை மற்றும் வெப்பச்சலனம் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.