ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 29 ஆகஸ்ட் 2017 (23:31 IST)

கனமழை எதிரொலி: கண்ட்ரோல் ரூமுக்கு சென்ற முதல்வர்: இவரல்லவா நிஜமான முதல்வர்

மும்பையில் கடந்த இரண்டு நாட்களாக பெய்து வரும் வரலாறு காணாத மழை காரணமாக அந்த நகரமே வெள்ளத்தில் தத்தளிக்கின்றது. பேருந்துகள், ரயில்கள், விமான போக்குவரத்துக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதால் இயல்பு வாழ்க்கை பெருமளவு பாதித்துள்ளது.



 
 
இந்த நிலையில் மும்பை காவல்துறை கண்ட்ரோல் ரூமில் இருந்து கொண்டு அவ்வப்போது அதிக பாதிப்பு அடைந்த பகுதிகளை தெரிந்து கொண்டு உடனுக்குடன் மீட்புப்படையினர்களை அனுப்பி வருகின்றனர்.
 
இந்த நிலையில் மும்பையின் நிலையை அறிந்த முதல்வர் ஸ்ரீதேவேந்திர பட்னாவிஸ் அதிரடியாக கண்ட்ரோல் ரூமுக்கு வருகை தந்தார். அவரே பாதிப்பு அடைந்த பகுதிகளை மானிட்டரில் பார்த்து மீட்பு நடவடிக்கையை துரிதப்படுத்தினார். இதனால் மீட்புப்பணிகள் மின்னல் வேகத்தில் நடந்து வருகிறது. முதல்வரின் இந்த செய்கையை பார்த்த பொதுமக்களும் அரசு அதிகாரிகளும் இவரல்லவோ நிஜமான முதல்வர் என்று புகழ்ந்து வருகின்றனர்.