ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 8 மே 2023 (13:42 IST)

வங்கக்கடலில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி: 10ஆம் தேதி புயல் என அறிவிப்பு..!

வங்க கடலில் இன்று காற்றழுத்த தாழ்வு உருவாகும் என ஏற்கனவே இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் சற்றுமுன் காற்றழுத்த தாழ்வு மையம் உருவானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
மேலும் இந்த காற்றழுத்த தாழ்வு, தாழ்வு மண்டலமாக மாறி மே பத்தாம் தேதி புயலாக உருவெடுக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 
 
ஒரு பக்கம் சென்னை உள்பட தமிழகம் முழுவதும் அக்னி நட்சத்திரவியில் கொளுத்தி வரும் நிலையில் தென்கிழக்கு வங்க கடல் மற்றும் தெற்கு அந்தமான் பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. 
 
இது நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடையும் என்றும் அதன் பின் நாளை மறுநாள் புயலாக மாறி வங்கதேசம் மற்றும் மியான்மர் நோக்கி நகரும் என்றும் வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 
 
மோக்கா என்ற பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் காரணமாக தமிழ்நாட்டிற்கு பெரிய அளவில் மழைக்கான வாய்ப்பு இல்லை என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
 
Edited by Mahendran