1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 4 அக்டோபர் 2022 (12:56 IST)

ஆன்லைன் செயலியில் கடன் வாங்கியதால் டார்ச்சர்: சென்னை ஐ.டி. ஊழியர் தற்கொலை!

suicide
ஆன்லைன் செயலியில் கடன் வாங்கிய ஐடி ஊழியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
சென்னை கேகே நகர் என்ற பகுதியைச் சேர்ந்த நரேந்திரன் என்ற 23 வயது இளைஞர் ஐடி துறையில் வேலை பார்த்து வருகிறார். இவர் ஆன்லைன் செயலியில் கடன் ஒரு சில ஆயிரம் மட்டுமே வாங்கியதாகவும், ஆனால் அந்த கடனுக்காக பல ஆயிரம் கட்டியதாகவும் இருப்பினும் திரும்பத் திரும்ப மீண்டும் கடனை கட்ட சொல்லி அவருக்கு செல்போன் மூலம் மிரட்டல் விடுத்ததாகவும் தெரிகிறது.
 
மேலும் அவரது உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் கடனை கட்டும்படி ஆன்லைன் செயலி நிர்வாகத்தினர் மிரட்டியதாகவும் இதனை அடுத்து நரேந்திரன் மன உளைச்சலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் திடீரென நரேந்திரன் தனது பெற்றோர் இல்லாத நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது செல்போனை கைப்பற்றிய போலீசார் நரேந்திரனை தற்கொலைக்கு தூண்டிய நபர்கள் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
 
Edited by Siva