1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 30 டிசம்பர் 2021 (15:40 IST)

இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலை!? – கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழகம் அதிர்ச்சி தகவல்!

இந்தியாவில் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் மூன்றாம் அலை உருவாகலாம் என கேம்ப்ரிட்ஜ் பல்கலைகழக பேராசிரியர் அச்சத்தை கிளப்பியுள்ளார்.

கொரோனாவின் திரிபடைந்த வேரியண்டான ஒமிக்ரான் தற்போது உலக நாடுகள் பலவற்றில் வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இந்தியாவிலும் ஒமிக்ரான் பாதிப்புகள் ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அதேசமயம் இதுவரை குறைந்து வந்த தினசரி கொரோனா பாதிப்புகள் மீண்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

இந்நிலையில் இந்தியாவில் இன்னும் சில வாரங்களில் கொரோனா பரவல் இந்தியாவில் வேகமெடுக்கலாம் என கேம்ப்ரிட்ஜ் பேராசிரியர் பால் கட்மே அச்சம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான கொரோனா ட்ராக்கரை தயாரித்த கட்மேன் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் இந்தியாவில் கொரோனா பரவல் வேகமாக அதிகரித்து வருவதாக கொரோனா இந்தியா ட்ராக்கர் மென்பொருள் மூலம் கண்டடைந்ததாக தெரிவித்துள்ளனர். பிப்ரவரியில் இந்தியாவில் மூன்றாவது அலை தாக்கலாம் என கான்பூர் ஐஐடி ஆய்வுகள் தெரிவிக்கும் நிலையில் இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.