1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Mahendran
Last Modified: வெள்ளி, 29 ஜூலை 2022 (09:23 IST)

இந்தியாவில் முதல்முறையாக நதிக்கு அடியில் மெட்ரோ ரயில்: ரூ.8600 கோடி செலவு

metro river
இந்தியாவில் முதல்முறையாக நதிக்கு அடியில் மெட்ரோ ரயில்: ரூ.8600 கோடி செலவு
இந்தியாவிலேயே முதல் முறையாக நதிக்கு அடியில் மெட்ரோ ரயில் திட்டம் தொடங்க இருப்பதாகவும் இதற்காக 8,500 கோடி செலவு செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
 
சென்னை உள்பட இந்தியாவின் பல நகரங்களில் தற்போது மெட்ரோ ரயில் சுரங்கப் பாதையிலும் தரைக்கு மேலேயும் செயல்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே. 
 
இந்த நிலையில் இந்தியாவில் முதல் முறையாக ரூபாய் 8600 கோடி செலவில் கொல்கத்தாவில் 500 மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ ரயில் பாதை அமைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
இந்த மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை 2023 ஆம் ஆண்டு முதல் மக்களின் பயன்பாட்டுக்கு வரும் என கொல்கத்தா மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
நாட்டின் முதல் நதிக்கு அடியில் போடப்படும் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை திறக்கப்பட்டால் பயணிகளுக்கு சிறப்பான அனுபவமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது