ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 4 மே 2023 (11:18 IST)

மீண்டும் 4000 ஐ நெருங்கியது கொரோனா பாதிப்பு: மத்திய சுகாதாரத்துறை தகவல்..!

கடந்த சில நாட்களாக இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் இன்று நேற்றைய விட சற்று அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3962 என மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் 7873 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர் என்றும் தற்போது கொரோனாவால் சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 36,244 என குறைந்துள்ளதாகவும் மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னாள் வரை தினசரி கொரோனா பாதிப்பு 10,000 என்று இருந்த நிலையில் தற்போது படிப்படியாக குறைந்து வருவது பொதுமக்களுக்கு நிம்மதியை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Edited by Mahendran