தொடர்புடைய செய்திகள்
- கோலி கம்பீர் சண்டை… கிரிக்கெட்டுக்கு நல்லதல்ல – ஹர்பஜன் சிங் வேதனை!
- இப்ப அக்னி நட்சத்திரமா தகிக்கும் கம்பீரும், கோலியும் ஒரு காலத்துல எப்படி இருந்தாங்க தெரியுமா?- ஒரு குட்டி ஸ்டோரி!
- 100 ஆண்டுகள் பழைய ரயில்நிலையத்தில் இந்தியன் 2 ஷூட்டிங்!
- சர்ச்சைக்குரிய ட்வீட்.. இந்தியர்களின் எதிர்ப்பால் மன்னிப்பு கேட்ட உக்ரைன் அரசு..
- 68.72 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!
நடுவானில் திவாலான விமானங்கள்.. அவசரமாக தரையிறக்கம்! – மும்பை பயணிகள் அதிர்ச்சி!
இந்தியாவில் உள்நாட்டு, பன்னாட்டு விமான சேவைகளில் ஈடுபட்டு வரும் Go First விமான நிறுவனம் திடீரென திவாலான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப் போக்குவரத்தில் முன்னணியில் உள்ள நிறுவனங்களில் 5வது இடத்தில் உள்ள விமான நிறுவனம் Go First விமான நிறுவனம். இந்நிறுவனத்தின் விமானங்கள் பல உள்நாட்டு விமான போக்குவரத்தில் உள்ளன. இந்நிலையில் இன்று Go First நிறுவனம் திவாலாகிவிட்டதாக திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
திவால் அறிவிப்பை Go First நிறுவனம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயத்திடம் வழங்கியுள்ள நிலையில் இன்று முதல் 3 நாட்களுக்கு Go First விமானங்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களிலேயே ஸ்ரீ நகர் மற்றும் டெல்லியிலிருந்து புறப்பட்டு மும்பை சென்றுக் கொண்டிருந்த இரண்டு Go First நிறுவன விமானங்கள் உடனடியாக சூரத்திற்கு திருப்பிவிடப்பட்டு அங்கு நிறுத்தப்பட்டது. இதனால் பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பின்னர் விமானங்கள் திருப்பி விடப்பட்டதற்கான காரணங்கள் சரியாக இல்லை என்று கூறி விமானங்கள் மீண்டும் மும்பைக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
Edit by Prasanth.K
