வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (13:12 IST)

“ஃபாசிச நாடாக இந்தியா மாறிவருகிறது” கனிமொழி குற்றச்சாட்டு

வலிமையாக நாடாக இருந்த இந்தியா தற்போது ஃபாசிச நாடாக மாற்றப்பட்டு வருவதாக கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்.

குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேட்டிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், பல வன்முறை சம்பவங்களும் நடந்தன. குறிப்பாக டெல்லி ஜாமியா மில்லயா பல்கலைக்கழகம், ஜே.என்.யூ. மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவங்களும், கலவரத்தை அடக்க போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் சிலர் உயிரிழந்த சம்பவங்களும் அதிர்ச்சியை ஏற்படுத்தின.

இந்நிலையில் திமுக எம்.பி. கனிமொழி தனது டிவிட்டர் பக்கத்தில், “உலக ஜனநாயக குறியீட்டில், ஒரே ஆண்டில் இந்தியா 10 இடங்கள் கீழிறங்கியுள்ளன. இது இந்தியாவின் உரிமைகள் எப்படி பறிக்கப்பட்டு வருகின்றன என்பதை காட்டுகிறது” என கூறியுள்ளார்.

மேலும் அதில், “வலிமையான ஜனநாயக நாடாக இருந்த இந்தியா ஒரு பாசிச நாடாக மாற்றப்பட்டு வருகிறது” எனவும் விமர்சித்துள்ளார்.