1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (11:36 IST)

மானத்த வாங்குராங்க... உள்கட்சி மோதலால் தலைமை அப்செட்!

தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் நடக்கும் பனிப்போரால் தலைமை அதிருப்தியில் உள்ளதாம். 
 
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணனுக்கும், பெருந்துறை அதிமுக எம்.எல்.ஏ. தோப்பு வெங்கடாச்சலத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக பனிப்போர் நீடித்து வருகிறது அனைவருக்கும் தெரிந்ததே.  
 
சமீபத்தில் கூட உள்ளாட்சி தேர்தலில் பெருந்துறை ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர்களுக்கு எதிராகவும், சுயேட்சைகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டார் அமைச்சர் கருப்பணன் செயல்ப்பட்டார் என தோப்பு வெங்கடாச்சலம் குற்றம்சாட்டி இருந்தார்.  
 
இந்நிலையில் தற்போது அரசு கொண்டு வந்த திட்டத்தையே ஒரு அமைச்சர் தடுக்க முயல்வது வேடிக்கையாக உள்ளது என விமர்சித்துள்ளார். அவர் கூறியதாவது, ஊரில் நடக்கும்  சில விஷயங்களை தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்காமல் குத்து பாடல்களுக்கு அமைச்சர் ஆட்டம் போடுகிறார்.  
கட்சியின் மாவட்ட செயலாளராக இருந்து கொண்டு உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக ஒருமுறை கூட ஆலோசனை கூட்டம் நடத்தியது இல்லை. இதே நிலை நீடித்தால், அதிமுக என்ற கட்சி முழுமையாக கரைந்துவிடுமே தவிர, கரைசேர வாய்ப்பு இல்லை. 
 
கட்சிக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டால் அமைச்சர் கருப்பணனை ஜெயலலிதாவின் ஆன்மா சும்மா விடாது என தெரிவித்துள்ளார். கருப்பணனை அமைச்சர் பதவியில் இருந்தும், கட்சியின் புறநகர் மாவட்ட செயலாளர் பதவியில் இருந்தும் நீக்குமாறு கட்சி தலைமையிடம் தோப்பு வெங்கடாச்சலம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இந்நிலையில் சொந்த கட்சிக்குள் அதுவும் அதிமுக கோட்டையாக கருதப்படும் கொங்கு மண்டலத்தில் கட்சிக்குள் நடக்கும் உட்கட்சி பூசலால் தலைமை அதிருப்தியில் இருப்பதாக சொல்லப்படுகிறது. யாரேனும் ஒருவர் அனுசரித்து போவதை விடுத்து மள்ளுக்கு நின்றால் பார்ப்பதற்கு நன்றாகவா இருக்கு என உள்கட்சி பூசலால் அதிருப்தி ஏற்பட்டுள்ளதாம்.