1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 22 ஜனவரி 2020 (22:42 IST)

மாவட்ட செயலாளராகும் உதயநிதிக்கு நெருக்கமானவர்: திமுகவில் பரபரப்பு!

நாடாளுமன்றத் தேர்தலை அடுத்து மாபெரும் வெற்றி உள்ளாட்சி தேர்தலிலும் கிடைக்கும் என்று திமுக தலைவர் மு க ஸ்டாலின் எதிர்பார்த்தாராம். ஆனால் கிடைத்த வெற்றி அவர் எதிர்பார்த்ததைவிட பாதியாக இருந்ததால் மாவட்ட செயலாளர்களை சமீபத்தில் நடந்த கூட்டத்தில் முக ஸ்டாலின் அவர்கள் வறுத்தெடுத்துதாக தெரிகிறது
 
அதுமட்டுமின்றி ஒருசில குறிப்பிட்ட மாவட்ட செயலாளர்களை அவர் மாற்றவும் முடிவு செய்திருக்கிறாராம். இந்த நிலையில் திமுக இளைஞரணி துணைச் செயலாளராக இருக்கும் அன்பில் பொய்யாமொழி மகேஷ் அவர்கள் உதயநிதியின் பக்கபலமாக இருந்து வரும் நிலையில் அவருக்கு மாவட்ட செயலாளர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது 
 
திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவாக இவர் திருச்சி பகுதியில் ஏதாவது ஒரு மாவட்டத்திற்கு மாவட்ட செயலாளராக நியமிக்கப்படலாம் என்றும் இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது
 
ஏற்கனவே உதயநிதி ஸ்டாலினுக்கு திமுக இளைஞரணி செயலாளர் பதவி கொடுக்கப்பட்டுள்ள நிலையில் அவருக்கு நெருக்கமான ஒருவருக்கு மாவட்ட செயலாளர் பதவியும் கிடைக்க இருப்பதால் திமுகவில் உதயநிதியின் கை ஓங்கி வருவதாக கூறப்படுகிறது