1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Petrol and Diesel rate at chennai today

சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

petrol
கடந்த மூன்று மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம் 
 
அண்டை நாடுகளில் பல மடங்கு பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்கள் சுதாரித்துக்கொண்டு 30 சதவீதம் சலுகை விலையில் ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணையை வாங்கியதால் இந்தியாவில் விலை உயர்வு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் சென்னையில் இன்றும் விலை மாற்றம் இன்றி பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை செய்து வருவதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. 
 
இதனையடுத்து இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 எனவும் சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 எனவும் விற்பனையாகி வருகிறது 
மூன்று மாதங்களாக விலை உயரவில்லை என்றாலும் பெட்ரோல் டீசலுக்கான வரியை குறைக்க வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகின்றன
 
 
அடுத்த கட்டுரையில்
59.21 கோடியை தாண்டியது உலக கொரோனா பாதிப்பு!