செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வியாழன், 30 ஜூலை 2020 (08:57 IST)

இது ஏ.ஆர்.ரகுமானுக்கு மட்டுமல்ல.. ஒட்டுமொத்த தமிழர்களுக்கும் அவமானம்! – கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்!

சமீபத்தில் பாலிவுட்டில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாக ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவாக கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் கருத்து தெரிவித்துள்ளார்.

பாலிவுட் சினிமாவில் தனக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுவதாகவும், தனக்கு எதிராக பலர் சதி செய்வதாகவும் ஆஸ்கர் விருது வென்ற ஏ.ஆர்.ரஹ்மான் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானை தொடர்ந்து ரசூல் பூக்குட்டியும் இதே புகாரை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஆதரவாக பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசியுள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் மகேந்திரன் “அண்மை காலத்தில் எல்லா இடங்களிலும் வகுப்பு வாத சூழ்ச்சிகள் நடைபெறுகின்றன. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு இதுதான் நடந்துள்ளது. ஏ.ஆர்.ரஹ்மானுக்கு ஏற்படக்கூடிய அவமானம் ஒவ்வொரு தமிழருக்குமானது. மிகவும் அமைதியானவர். அவர் எவ்வளவு கஷ்டப்பட்டிருந்தால் அப்படி பேசியிருப்பார். கலையை தவிர எதையும் அறியாத அவருக்கு அனைத்து தமிழர்களும் ஆதரவாக இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார்.