புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. இ‌ந்‌திய ‌சி‌னிமா
Written By Papiksha Joseph
Last Modified: புதன், 29 ஜூலை 2020 (16:37 IST)

பாகுபலி சாதனையை முறியடித்த 'தில் பெச்சாரா' இந்திய சினிமாவில் ஒரு புதிய ரொகார்டு!

பாலிவுட் உலகில் பிரபல இளம் நடிகரான சுஷாந்த் சிங் ராஜ்புத் சில வாரங்களுக்கு முன்னர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். ஒட்டு மொத்த இந்தியாவிலும் இந்த சம்பவம் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

சுஷாந்த் சிங் இறப்பதற்கு முன்பாக நடித்து கடந்த ஜூலை 24ம் தேதி வெளியான படம் “தில் பேச்சாரா”.இந்த படத்தில் ஒரு விபத்தில் காலை இழந்து, செயற்கைக் கால் பொருத்தியவராக வலம் வரும் சுஷாந்த் சிங் தைராய்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிருக்கு போராடும் கல்லூரி மாணவி சஞ்சனா சங்கியை காதலித்து அவரது கனவுகளை நிறைவேற்றிவிட்டு காதலிக்கு முன்பே இறந்துவிடுகிறார்.

இந்த படத்தின் கதை அவரது நடிப்பு அனைவராலும் உணர்ச்சி ரீதியாக பார்க்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த படம்  வெளிவந்த 24 மணி நேரத்தில் 95 மில்லியன் பார்வையாளர்கள் படத்தை பார்த்துள்ளனர். இதன் மூலம் ஓரே நாளில் ரூ. 2000 ஆயிரம் கோடி வசூல் செய்து மாபெரும் உலக சாதனை படைத்ததுள்ளது. இதனை படத்தின் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துளளார்.