வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : வெள்ளி, 3 ஏப்ரல் 2020 (14:24 IST)

லாக்டவுனில் அதிகரிக்கும் கர்ப்பம்... காதல் பண்ணுங்க... பேபி பண்ணாதீங்க - புலம்பும் பிரபல மருத்துவர் !

சீனாவின் வுஹான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரஸ் படிப்படியாக பரவி அமெரிக்கா, இத்தாலி, இங்கிலாந்து, ஈரான், ஸ்பெயின் உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் உள்ள மனித இனத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்து வீட்டில் முடங்கியிருப்பதால் கணவன் மனைவிக்கு இடையே காதல் , ரொமான்ஸ் பலமடங்கு பெருக்கெடுத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் கொரோனா வைரஸ் விட காதல் வைரஸ் அதிகரித்துவிட மனைவிமார்கள் ஏரளாமானோர் கர்ப்பம் தரித்து வருகின்றனர் என பிரபல நாட்டுபுற பாடகர் புஷ்பவனம் குப்புசாமியின் மகள் மருத்துவர் பல்லவி அகர்வால் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது முக நூல் பக்கத்தில் " வீட்டில் பாதுகாப்பாக இருங்கள் நிறைய லவ் பண்ணுங்க நோ பேபி... நிறைய pregnant patient வருகிறார்கள். என்னடா பண்றீங்க என கிண்டலாக பதிவிட்டுள்ளார். இதனை இணையவாசிகள் அனைவரும் ஷேர் செய்து மீம்ஸ் போட்டு வருகின்றனர்.