1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 1 மே 2021 (18:45 IST)

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை உயர்வு

தமிழகத்தில் அரசு வேலைக்காக காத்திருப்போர் எண்ணிக்கை 63 லட்சத்து 63 ஆயிரம் பேராக அதிகரித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

கால்காசு சம்பளம் என்றாலும் அது சர்க்கார் சம்பளமாக வேண்டும் என சொலவடை உள்ளது.
அந்த வகையில் தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 28 ஆம் தேதி வரை எம்பிளாய்மெண்ட் அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருப்போர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதுவரை சுமார் 63,63,122 பேர் அரசுவேலைக்காகப் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களின் பெரும்பாலானோர் 24 வயதுமுதல் 35 வயதுள்ளவர்கள் ஆவர். ஆசிரியர் பட்டயப் பயிற்சி முடித்தவர்கள் சுமார் 1,65,983 பேரும் பி.எட் பட்டதாரி ஆசிரியர்கள் சுமார்2,97,363 பேராக உள்ளனர். பொறியிடல் பட்டதாரிகள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.